Categories
மாநில செய்திகள்

10 மணிக்கு சசிகலா டிஸ்சார்ஜ்… பதற்றத்தில் அரசியல் கட்சிகள்…!!!

பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலா இன்று காலை 10 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா, தமது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதுமட்டுமன்றி அவருக்கு கொரோணா பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தன.

அதன்பிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிக்கை வெளியிட்டது. அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவித்தது. இந்நிலையில் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலா இன்று காலை 10 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. பெங்களூருவில் இருந்து தமிழகம் திரும்பும் சசிகலாவால் அரசியல் மாற்றம் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Categories

Tech |