தனுஷ் ஐஸ்வர்யாவை இணைக்கும் முயற்சியில் தனுஷின் அப்பா அவரிடம் 10 மணி நேரம் தொடர்ந்து பேசியும் மனம் மாறவில்லை.
தனுஷும் ஐஸ்வர்யாவும் விவாகரத்து செய்வதாக கூறியுள்ளனர். இவர்கள் மீண்டும் இணைவார்களா என்று ஒரு மாதத்திற்கு மேலாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். மேலும் இவர்களை பற்றிய தகவல்கள் நாள்தோறும் வெளியாகிய வண்ணம் உள்ளது. இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா இறங்கி வந்தாலும் தனுஷ் அதை மறுத்து நான் இப்போது தான் நிம்மதியாக இருக்கிறேன் என கூறியிருக்கிறார். ஐஸ்வர்யா நான் தான் அவசரப்பட்டு விட்டதாக கதறி அழுதாலும் தனுஷின் மனம் கரையவில்லை.
இதனால் கடுப்பான ஐஸ்வர்யா தனது வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். இரு குடும்பத்தினரும் சமாதான முயற்சிகளை மேற்கொண்ட போதும் தனுஷ் பிடிகொடுக்காமல் இருக்கிறார். ஐஸ்வர்யாவை பற்றி யாராவது பேச வந்தாலே தயவு செய்து அதை பற்றி மட்டும் பேசாதீர்கள் முட்டுக்கட்டை போடுகிறார். இவர்களை இணைக்கும் முயற்சியில் தனுஷின் அப்பா அவரிடம் தொடர்ந்து பலமுறை பேசியும் மனம் மாறவில்லை தனுஷ். இந்நிலையில் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழும்படி கூறி தொடர்ந்து 10 மணி நேரம் கஸ்தூரி ராஜா தனது மகன் தனுஷிடம் பேசிய தகவல் வெளியாகியுள்ளது.
தற்பொழுது தனது அப்பா கஸ்தூரி ராஜாவிடம் ஐஸ்வர்யாவை பிரிந்து வாழ்வது தான் சரியாக இருக்கும் என்று அவரது அப்பாவையும் பிரைன் வாஸ் செய்கிறாராம். இதற்கிடையில் தனுஷின் முடிவால் அவரின் ரசிகர்களும் அவர் வழியிலேயே செல்வார்கள் என்றும், அவரது ரசிகர்களுக்கு தனுஷ் நல்ல முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றும் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மூத்த சினிமா பிரபலங்கள் வலியுறுத்தி வருகின்றனர்.