புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை இல்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இருப்பினும் சில கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என தெரிவித்திருந்தது. அதன்படி டிசம்பர் 31 இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மதுபான கடைகள், பார்கள், விடுதிகள் என எந்த இடங்களிலும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளது.
பொது இடங்களில் மது அருந்தக் கூடாது. விடுதிகளில் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் மட்டும் தங்கிக் கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் மது பிரியர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.