Categories
மாநில செய்திகள்

10 மணி வரை மழை விடாது…. மேலும் 2 மாவட்டங்களில் லீவ்…. தமிழகத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை,திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

இந்நிலையில் சென்னை,திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மழை காரணமாக மாணவர்களின் நலனை கருதி சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.

Categories

Tech |