Categories
தேசிய செய்திகள்

10 மாதங்களில் 2 வது முறையாக…. பாஜக எம்எல்ஏ மீது பாலியல் புகார்…. பரபரப்பு சம்பவம்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ பிரதாப் லால் பீல் என்பவர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவு செய்துள்ளார். இதனால் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது உதய்பூர் மாவட்டத்தை சேர்ந்த 37-வயது பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பிரதாப் லால் பீல் மீது காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அந்த பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடந்த 2 வருடங்களாக பிரதாப் லால் பாலியல் ரீதியாக பயன்படுத்தியதாக கூறியுள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதியளித்துள்ளார். ஆனால் வல்லபாநகரில் இடைத் தேர்தல் நடந்தபின் அந்த பெண்னுக்கு போன் செய்வதை செய்வதை நிறுத்திவிட்டார். இதுகுறித்து அந்த பெண் கேட்டபோது அவரை மிரட்டியுள்ளதாக அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பா.ஜ.க எம்.எல்.ஏ பிரதாப் லால் பீல் மீதுகாவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் புகாரளித்த பெண் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பா.ஜ.க எம்.எல்.ஏ பிரதாப் லால் பீல் மீது கடந்த10 மாதங்களில் 2-வது முறையாக பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |