Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

10 மாதங்களுக்குப் பிறகு பிடிபட்ட, தாயை கொலைசெய்த மகன் எப்படி பிடிபட்டார் ….?

சீர்காழி அருகே குடிபோதையில் தாயை கொலை செய்த மகன் 10 மாதங்களுக்குப் பிறகு பிடிபட்டுள்ளார். காவல்துறையிடம் எப்படி சிக்கினார் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருக்கருகாவூர் பகுதியை சேர்ந்தவர் சாவித்திரி இவர் வீட்டிற்கு அருகே சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாக்கடை அமைப்பதற்காக குடியிருப்பு பகுதியில் குழி தோண்டப்பட்டு அந்த மணல் அருகே உள்ள இடத்தில் கொட்டப்படுகிறது. இந்த நிலையில் மணல் குவியலில் நாய் ஒன்று விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு செலையும் சில எலும்புத் துண்டுகளும் கிடந்தன. இதனை நாய் தோண்டி தோண்டி வெளியே எடுக்க அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது. இதனை அறிந்த பொதுமக்கள் அசம்பாவிதம் நடந்து உள்ளதை உணர்ந்து கிராம நிர்வாக அலுவலர்ருக்கும் காவல் துறையினருக்கும் தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சீர்காழி காவல்துறையினர் பொது மக்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது தாயை காணவில்லை எனக் கூறி வந்த வேலு என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 10 மாதங்களுக்கு முன் வேலு விற்கும் தாயார் சாவித்திரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அப்போது குடிபோதையில் தாயாரை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாகவும் போலீசாரிடம் வேலு கூறினார். மேலும் இச்சம்பவத்தை மறைக்க தனது வீடு அருகே குழிதோண்டிப் தாயாரை புதைத்துவிட்டு தாயாரை காணவில்லை என ஊர் மக்களிடம் நாடகம் ஆடியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இதனை பதிவு செய்த காவல்துறையினர் வேலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |