Categories
தேசிய செய்திகள்

10 மாதம் சுமந்து பெற்ற தாய்க்கு….. விஷம் வைத்து கொன்ற மகள்…. பெற்றதற்கு இதுதான் பரிசா….? அதிர்ச்சி….!!!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே குன்னம்குளம் கீழூரில் தாய்க்கு மகள் விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாந்தன் என்பவரது மனைவி ருக்மணி (57) உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் மகள் இந்துலேகா (40) கைது செய்யப்பட்டார். நேற்று குன்னம்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறி தனது தாயை மகள் அழைத்து சென்றார். ருக்மணி உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார்.

இதனிடையே சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். தீவிர பரிசோதனையில் விஷம் குடித்ததால் மரணம் நிகழ்ந்தது தெரியவந்தது. மகளை காவலில் எடுத்து விசாரித்ததில், அவர் விஷம் கொடுத்து கொன்றது தெரியவந்தது. சொத்து தொடர்பாக ருக்மணிக்கும், இந்துலேகாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதை அடுத்து, தாயை கொலை செய்ததாக கைதான மகள் வாக்குமூலம் அளித்தார். இது பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |