Categories
தேசிய செய்திகள்

10 மாத குழந்தைக்கு ரயில்வேயில் வேலை…. வெளியான சோகமான காரணம்….. என்ன தெரியுமா….????

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 10 மாத குழந்தை ராதிகா யாதவ். இவரின் பெற்றோர் ராஜேந்திர குமார் யாதவ்-மஞ்சு யாதவ். ராஜேந்திர குமார், பிலாய் பகுதியில் ரயில்வே ஊழியராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில், கடந்த ஜூன் 1ஆம் தேதி குடும்பத்துடன் பைக்கில் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் ராஜேந்திர குமார் மற்றும் அவரது மனைவி உயிரிழந்தனர். நல்வாய்ப்பாக குழந்தை உயிர் பிழைத்தார்.

குழந்தையை அவரது பாட்டி பராமரித்து வருகிறார். இந்தநிலையில், இந்தியன் ரயில்வே கருணை அடிப்படையில் ராதிகாவுக்கு வேலை வழங்குவதாக அறிவித்துள்ளது. ராதிகா தனது 18ஆவது வயதில் பணியில் சேருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |