Categories
தேசிய செய்திகள்

10 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய ஊக்கு… 3 மணி நேர போராடிய மருத்துவர்கள்… பெற்றோர்களே கவனம்…!!!

10 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய ஊக்கை மருத்துவர்கள் மூன்று மணிநேர போராட்டத்திற்கு பிறகு அறுவை சிகிச்சை செய்து வெளியில் எடுத்துள்ளனர்.

கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளி நகர் பகுதியில் வசித்து வருபவர் சிக் ஆப்தீன். இவர்களுக்கு பிறந்து 10 மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று உள்ளது. நேற்று காலை அவரது தாயார் குழந்தையைக் குளிப்பாட்டிய பிறகு குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளது. குழந்தை ஏன் அழுகிறது என்ற காரணம் தெரியாமல் தாயார் தவிர்த்துள்ளார். சிறிது நேரத்தில் குழந்தை மூச்சு விட முடியாமல் திணறி, மயங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது குழந்தையின் தொண்டை மற்றும் வாய்ப்பகுதியில் ஸ்கேன் செய்து பார்த்தபோது ஊக்கு சிக்கி இருந்தது தெரியவந்தது. பிறகு உடனடியாக குழந்தையின் வாய் பகுதியிலும், மூக்குப் பகுதியிலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஊக்கு வெளியே எடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. பெற்றோர்களே குழந்தைகளை நாம் மிக கவனமுடன் கவனிக்க வேண்டியது அவசியம்.

Categories

Tech |