வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக சில நாட்களாகவே தமிழகத்தின் சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.