வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக சில நாட்களாகவே தமிழகத்தின் சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.