தமிழகத்தில் புதிய அரசு கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தது. அதன்படி தமிழகத்தில் புதிய அரசு கல்லூரிகள் தொடங்கப்படும் சட்டப்பேரவையின் போது மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் அறிவித்தார். இந்நிலையில் அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அதில், தமிழகத்தில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் 10 புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, கள்ளகுறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில், ஈரோடு மாவட்டம் தாளடி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், நெல்லை மாவட்டம் மானூர் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஆகிய மாவட்டங்களில் புதிய அரசு கலை கல்லூரிகள் தொடங்கப்படும்.
அதனை போல தர்மபுரி மாவட்டம் ஏரியூர், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் வேலூர் மாவட்டம் ஏற்காடு ஆகிய மாவட்டங்களில் புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன. மேலும் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் புதிய அரசு மகளிர் கலை கல்லூரி தொடங்கப்பட உள்ளது என்று அந்த அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.