வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. தென்மேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து மேலும் வலுவிழக்ககூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, அரியலூர் ,பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.