தமிழகத்தில் 10 கோவில்களில் முதலுதவி மருத்துவ மையங்களின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதுபற்றி இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து சமய அறநிலையத் துறை சார்பாக திருக்கோவிலுக்கு வருகைதரும் பக்தர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.
இதையடுத்து பக்தர்கள் அதிகளவு வருகை தரும் பழனி, திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி, ராமேஸ்வரம், திருவண்ணாமலை, மருதமலை, திருவரங்கம், மேல்மலையனூர், சோளிங்கர் ஆகிய 10 கோவில்களில் மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர்களுடன் கூடிய முதலுதவி மருத்துவ மையங்கள் 10 கோடி ரூபாய் செலவில் துவங்குவதற்காக ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த மையங்களில் 2 மருத்துவர், செவிலியர், பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.