Categories
மாநில செய்திகள்

10 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. தலா ரூ.2000 ஊக்கத்தொகை…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு எட்டு மாதங்கள் கழித்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளன.

இந்நிலையில் உயர்கல்வி இடைநிற்றலை தவிர்க்க சிறப்பு ஊக்கத்தொகை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஊக்கத் தொகை பெற தகுதியான மாணவர்களின் வங்கிக்கணக்கு உள்ளிட்ட முழு விவரங்களை அனுப்புமாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ரூ.1, 500, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |