Categories
மாநில செய்திகள்

10 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு மாற்றம்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில் 10 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்தப்பட உள்ளது. மேலும் வருகின்ற 19-ஆம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் அரசு பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான தேர்தல் பயிற்சி வகுப்புகளும் நாளை ( பிப்.10 ) நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் உடுமலையில் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் உடுமலை கல்வி மாவட்ட அரசு பள்ளிகளில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர்களுக்கு தேர்வு நடத்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இருப்பினும் ஆசிரியர்கள் பெரும்பாலான பாடங்களை இன்னும் நடத்தி முடிக்காத நிலையில் முக்கியமான பாடங்களில் இருந்து மட்டும் வினாக்களை தயார் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த இரண்டு வருடங்களாக பிளஸ்-1 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதாமல் அடுத்தடுத்த வகுப்புக்கு தேர்ச்சி பெற்று வருகின்றனர். மேலும் ‘ஆல்பாஸ்’ நடப்பாண்டிலும் அறிவிக்கப்பட்டால் பிளஸ்-1 மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள் என்று பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறிவருகின்றனர். அதேபோல் பள்ளிகளில் நாளை திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது.

மேலும் உள்ளாட்சி தேர்தலுக்கான பயிற்சி வகுப்பும் அதே நாளில் நடத்தப்படுவதால் ஆசிரியர்களால் தேர்வை கண்காணிக்க இயலாது. எனவே திருப்புதல் தேர்வு இல்லாத நாளில் தேர்தல் பயிற்சி வகுப்பை நடத்த வேண்டும், இல்லை என்றால் பள்ளிக்கல்வித்துறை தேர்வு நாளை மாற்ற வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |