கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய நேரடி முகவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் தேர்வுக்கான நேர்காணல், ஆகஸ்ட் 16 ஆம் தேதி எண் 2 சிவஞானம் சாலை, தியாகராய நகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கு 18 முதல் 50 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் தகுதிக்கு ஏற்ப வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories