Categories
தேசிய செய்திகள்

10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த சக மாணவர்கள்… இணையத்தில் வெளியான வீடியோ… அதிர்ச்சி சம்பவம்…!!!!!

தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத்தில் ஹயநத்நகரில் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 17 வயது மாணவி ஒருவர் 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கின்றார். இந்நிலையில் அந்த மாணவியின் வீட்டிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் வகுப்பில் படிக்கும் சில மாணவர்கள் மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களும் சென்றுள்ளனர். இதனையடுத்து அந்த மாணவர்கள் கூட்டாக சேர்ந்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக எடுத்து வைத்துள்ளனர். இது பற்றி யாரிடமாவது தெரிவித்தால் வீடியோவை இணையதளத்தில் பதிவிட்டு விடுவோம் என மிரட்டியதால் அந்த மாணவி இது குறித்து யாரிடமும் கூறவில்லை.

இந்நிலையில்  10 நாட்களுக்கு பின் மீண்டும் 2 மாணவர்கள் மாணவியின் வீட்டிற்கு சென்று அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் அந்த வீடியோவை மாணவர் வாட்ஸ் அப்பில் நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளான். அந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவி நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால்  அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த போலீசார் 5 மாணவர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |