10-ம் வகுப்பு படிக்கும் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்தப் பள்ளியில் கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுவன் பொது தேர்வில் தோல்வியடைந்துள்ளார். இவர் கடந்த மே மாதம் 22-ம் தேதி தன்னுடைய வீட்டிற்கு சக மாணவர்களை அழைத்து தன்னுடைய பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளார். இந்த விழாவில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி உள்பட பலர் கலந்து கொண்டார்.
இந்த சிறுமி 17 வயது சிறுவனுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார். இந்த பிறந்தநாள் விழா முடிந்த பிறகு 17 வயது சிறுவன் வேலைக்காக சென்னைக்கு கிளம்பி சென்று விட்டார். இந்நிலையில் 17 வயது சிறுவனு =டன் மாணவி சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வைத்து 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் மாணவியை மிரட்டியுள்ளார். அந்த மாணவர் நான் கூப்பிடும் இடத்திற்கு நீ வரவில்லை என்றால் புகைப்படத்தை உன்னுடைய வீட்டில் காமித்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதன் காரணமாக பள்ளியின் மதிய இடைவேளையின் போது மாணவி ஆவினங்குடி பகுதியைச் சேர்ந்த அந்த மாணவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது மாணவியுடன் ஒரே வகுப்பில் படிக்கும் 2 மாணவர்களும் அங்கு இருந்துள்ளனர். இவர்கள் 3 பேரும் சேர்ந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து அதை செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துள்ளனர். இந்த வீடியோவை கொடிக்குளத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கு அனுப்புவதற்கு 3 மாணவர்களும் முடிவு செய்துள்ளனர். ஆனால் அவரிடம் சாதாரண செல்போன் இருந்ததால் அவருடன் வேலை பார்க்கும் மற்றொருவருக்கு வீடியோவை அனுப்பி வைத்துள்ளனர். இதன் காரணமாக வீடியோவானது மாணவியுடன் படிக்கும் மற்றொரு மாணவருக்கும் கிடைத்துள்ளது.
இவரும் வீடியோவை வைத்து மாணவியை மிரட்டியுள்ளார். இதனால் மாணவி தனக்கு நடந்ததை தன்னுடைய தாயிடம் சென்று கூறியுள்ளார். இது தொடர்பாக மாணவியின் தாயார் ஆவினங்குடி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொடிக்குளத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் மாணவியுடன் படிக்கும் 3 மாணவர்கள் உட்பட 4 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.