நேஷனல் அலுமினியம் கம்பனி காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனமான நால்கோ எனப்படும் நேஷனல் அலுமினியம் கம்பனி லிமிடெட் (National Aluminium Company Limited) நிறுவனத்தில் பாய்லர் ஆப்ரேட்டர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் : நேஷனல் அலுமினியம் கம்பனி லிமிடெட்
பணி: பாய்லர் ஆப்ரேட்டர் (Boiler Operator)
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.29,500 – 70,000
வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Boiler Attendant பணிக்கான தொழிற்பயிற்சி
பணி அனுபவம் : 2 ஆண்டு
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு
அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 18 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின்போது முதல் 12 மாதங்களுக்கு மாதம் ரூ.12,000 அடுத்த 6 மாதங்களுக்கு மாதம் ரூ.15,500 ஆம் உதவித்தொகை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nalcoindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் செய்யப்பட்ட நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்பி வைக்க வேண்டிய அஞ்சல் முகவரி:
Recruitment Cell, HRD Department, S &P Complex, NALCO, Angul – 759 145, Odisha
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சேர கடைசி தேதி: 31.01.2021
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2021
மேலும் விவரங்கள் அறிய https://nalcoindia.com/wp-content/uploads/2020/12/Advertisement-No.14200301-for-SUPTJOT-OperatorBoiler_ver-02.pdf என்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.