Categories
மாநில செய்திகள்

10 ரூபாய்க்கு டி-ஷர்ட்…. கூட்டத்தை கட்டுப்படுத்த திணறிய போலீசார்…. எங்கு தெரியுமா….?

துணிக்கடையில் 10  ரூபாய்க்கு டி-ஷர்ட் விற்பனை செய்யப்படும் என அறிவித்ததால் மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் இன்று புதிதாக துணிக்கடை ஒன்று திறக்கப்பட்டது. இந்த கடை திறப்பை முன்னிட்டு அறிமுக சலுகையாக 10 ரூபாய்க்கு டி-ஷர்ட் விற்பனை செய்யப்படுவதாக நேற்று விளம்பரம் செய்யப்பட்டது. இந்த விளம்பரம் மக்களை பெரிதும் கவர்ந்த நிலையில், ஏராளமான வாலிபர்கள்  அதிகாலை 5 மணி முதல்  கடையின் முன்பு குவிந்தனர். ஆனால் கடை காலை 8 மணி அளவில் தான் திறக்கப்பட்டது. கடை திறப்பதற்குள் நெரிசல் அதிகமாகி தள்ளுமுள்ளு ஏற்படும் அளவிற்கு நிலைமை சென்றது. இந்நிலையில் வாலிபர்கள் 10 ரூபாய் கொடுத்து கை நிறைய டி-ஷர்ட் வாங்கி கொண்டு சென்றனர். ஆனால் கூட்டம் குறையாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் மக்கள் வந்தனர். அந்த பகுதியில் உள்ள சாலை முழுவதும் வரிசையாக இரு சக்கர வாகனங்களை நிறுத்தி  விட்டு மக்கள் கடையில் முன்பு குவிந்தனர்.

இதுகுறித்து தகவல் இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் போலீசார் கடையை மூடுமாறு உரிமையாளர்களிடம் கூறியுள்ளனர். அதன்பின்னர் அங்கிருந்து மக்கள் கலைந்து  சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |