Categories
தேசிய செய்திகள்

10 ரூபாய்க்கு மதிய உணவு… மாநில அரசின் சூப்பர் டூப்பர் திட்டம்….!!!

கேரளாவில் பத்து ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது

கேரள முதல்வர் பிரனாய் விஜயன் ‘பசியில்லா என் கேரளம்’ என்ற திட்டத்தின் மூலம் 10 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை கொச்சி நகரில் அண்மையில் தொடங்க உத்தரவு பிறப்பித்தார். கொச்சி மாநகராட்சி மேயர் அனில் குமார் தலைமையில் திரைப்பட நடிகை மஞ்சுவாரியார் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தை தொடங்கிவைத்து பேசிய கொச்சி மேயர் அனில் குமார் கூறியதாவது, கொச்சி மாநகரத்தில் 10 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் தினமும் 1500 பேருக்கு உணவு வழங்கும் விதமாக குடும்ப ஸ்ரீ என்ற பெண்கள் சுய உதவி குழுக்கள் மூலம் உணவு சமைக்கப்படுகிறது என்று கூறினார். வருங்காலத்தில் கேரளாவின் அனைத்து பகுதிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார். இதற்காக பயிற்சி பெற்ற 14 குடும்ப ஸ்ரீ மகளிர் இணைந்து சமையல் பணியை செய்கின்றனர்.

Categories

Tech |