10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் அது சட்டப்படி குற்றம் என மத்திய இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சில கடைகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாக தொடர் புகார்கள் எழுந்து வந்தன. இதனை தொடர்ந்து ரிசர்வ் வங்கி புழக்கத்தில் இருக்கும் அனைத்து பத்து ரூபாய் நாணயங்களும் செல்லுபடியாகும். இவற்றை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம் என எச்சரிக்கை விடுத்தது. ஆனால் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க சிலர் தயக்கம் காட்டுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி பத்து ரூபாய் நாணயங்களை எந்த தயக்கமும் பயமும் இல்லாமல் வாங்கிக்கொள்ளலாம். 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார். மேலும் நாட்டில் சட்ட பூர்வமாக நடக்கும் தொண்டர்கள் மற்றும் பரிவர்த்தனைகளுக்கும் 10 ரூபாய் நாணயங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என அவர் கூறியுள்ளார்.