Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

10 ரூபாய் மின் கட்டண அபராதம்….. ஆசிரியையிடம் 2 3/4 லட்ச ரூபாய் அபேஸ்….. போலீஸ் வலைவீச்சு….!!!

பணம் மோசடி செய்த மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியை வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த 15-ஆம் தேதி ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் மின்கட்டணத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என இருந்தது. ஏற்கனவே மின் கட்டணத்தை செலுத்தி இருந்த ஆசிரியை குறுந்தகவல் வந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் மின் இணைப்பை துண்டிக்காமல் இருக்க வேண்டுமென்றால் வாட்ஸ் அப்பில் வரும் லிங்க் மூலமாக செயலியை பதிவிறக்கம் செய்து அபராத தொகையை மட்டும் செலுத்துங்கள் என கூறியுள்ளார்.

இதனை நம்பிய ஆசிரியர் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து பார்த்தபோது 10 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை பார்த்த ஆசிரியர் பத்து ரூபாய் தானே ஆன்லைன் மூலமே செலுத்தி விடலாம் என நினைத்து வங்கியின் விவரம் மற்றும் ஒன் டைம் பாஸ்வேர்டை பகிர்ந்துள்ளார். சிறிது நேரத்தில் வங்கி கணக்கில் இருந்து 2,40,000 ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர் தான் மாற்றப்பட்டதை உணர்ந்து சைபர் சைன் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பணத்தை மோசடி செய்த மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |