புகழ்பெற்ற பிரெஞ்சு வேதியியல் அறிஞர் மேரி கியூரி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். இவர் போலந்து நாட்டில் உள்ள வர்ஷா என்ற இடத்தில் கடந்த 1867-ம் ஆண்டு பிறந்தார். இவர் 2 நோபல் பரிசுகளைப் பெற்ற உலகின் முதல் பெண்மணி ஆவார். இவர் ரேடியோ மற்றும் பொலோனியம் என்ற கதிர்வீச்சு மூலங்களை கண்டுபிடித்துள்ளார். இந்த கதிர்வீச்சுகள் மின்சாரம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் கடந்த 1892-ம் ஆண்டு மேரி கியூரி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது அடிக்கடி மயங்கி விழுந்து விடுவார். ஏனெனில் மேரி கியூரி மிகவும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரால் ஒரு வேளை சாப்பாடு கூட சாப்பிட முடியாது. இவர் காலேஜ் முடித்தவுடன் ஆராய்ச்சி செய்வதற்காக ஆய்வகத்திற்கு சென்றுள்ளார்.
ஆனால் மேரி க்யூரி ஒரு பெண் என்பதால் அவரை ஆய்வகத்திற்கு அனுமதிக்கவில்லை. இதனால் மேரி க்யூரி தன்னுடைய வீட்டிலேயே ஆராய்ச்சியை தொடங்கியுள்ளார். இவருடைய விடாமுயற்சியாலும், கடின உழைப்பினாலும் ரேடியம் மற்றும் பொலோனியம் என்ற கதிர்வீச்சுகளை கண்டுபிடித்தார். இந்நிலையில் இரண்டாம் உலகப் போரின்போது மேரிகியூரி தன்னுடைய நோபல் பரிசுகளைப் விற்று அந்தப் பணத்தில் மொபைல் ரேடியோகிராபி யூனிட் என்ற மெஷினை தயார் செய்தார். இந்த மெஷினை பயன்படுத்தி 2-ம் உலகப்போரில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தா லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை மேரி கியூரி காப்பாற்றினார். இவர் கண்டுபிடித்த ரேடியம் கதிர்வீச்சினால் இன்று பலபேர் கேன்சரில் இருந்து குணமடைகின்றனர். மேலும் மேரி கியூரி கடந்த 1934-ம் ஆண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.