Categories
மாநில செய்திகள்

10 லட்சம் பேருக்கு பால் அட்டை…. ஆவின் அறிவிப்பால்…. சென்னைவாசிகள் ஹேப்பி…!!!!

சென்னையில் 13.5 லட்சம் லிட்டர் பால் ஆவின் நிறுவனம் வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 900 விற்பனை மையங்கள் உள்ளன. இதன் மூலமாக 12 லட்சம் பேருக்கு பால் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பால் அட்டை மூலமாக நாள்தொறும் 6 லட்சம் லிட்டர் வரை பால் வழங்கப்படுகிறது. இந்த பால் அட்டைகள் ஆரஞ்சு, பச்சை மற்றும் நீல நிறங்களில் வழங்கபடுகிறது.

இதில் நீல நிற பால் பாக்கெட்டுக்கு மூன்று ரூபாய், பச்சை மற்றும் ஆரஞ்சு நிற பாக்கெட்டுக்கு இரண்டு ரூபாய் குறைவாக பால் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையில் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்ட சலுகையும் இந்த அட்டைதாரர்களுக்கு கிடைத்து வருகிறது. இந்தநிலையில் ஜனவரி 2 முதல் 15ம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் பொதுமக்களை கவரும் விதமாக 10 லட்சம் பேருக்கு பால் அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பால் அட்டை வாங்க விரும்புவர்கள் அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |