Categories
தேசிய செய்திகள்

10 வயதுக்கு மேல் உள்ள…. உங்களுடைய குழந்தைகளுக்கு…. SBI-யின் கலக்கல் திட்டம்…!!!

உங்களுடைய குழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே சேமிப்பு, முதலீடு போன்ற நிதி சார்ந்த விஷயங்களை கற்றுகொடுப்பது மிகவும் அவசியம். முதலாவதாக பணத்தை சேமிக்க கற்றுக் கொடுங்கள். எனவே குழந்தைகளுக்கு வங்கி சேமிப்பு கணக்கை ஆரம்பிக்கலாம். அந்தவகையில் SBI வங்கி சிறுவர்களுக்கு சிறந்த சேமிப்பு திட்டங்களை வைத்துள்ளது.

அதில் ஒன்று தான் Pehla Kadam. இதில் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் இணைந்து Joint account தொடங்கலாம். இதுபோக, Pehli Udaan திட்டத்தை 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் அனைவரும் ஆரம்பிக்கலாம். இந்த கணக்கை சம்பந்தப்பட்ட சிறுவர் மட்டுமே முழுமையாக கட்டுப்படுத்த முடியும். பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு பங்கில்லை.

இந்த திட்டத்தில் ஏடிஎம் அல்லது டெபிட் கார்டு வழங்கப்படும். இதில் தினமும் ரூ.5000 வரை பணம் அனுப்பலாம். மொபைல் பேங்கிங் சேவையில் தினமும் ரூ.2000 வரை அனுப்பலாம். நெட் பேங்கின் வசதியில் தினசரி 5000 ரூபாய் வரை அனுப்பலாம். செக் புக் வழங்கப்படும், ஓவர்டிராப்ட் வசதி இல்லை. எஸ்பிஐ இணையதளத்தில் ஈசியாக இந்த கணக்கை தொடங்கிவிடலாம்.

Categories

Tech |