Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

10 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… சில்மிஷம் செய்த 2 சிறுவர்கள் கைது…!!!

கோவையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு சிறுவர்களை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையை அடுத்துள்ள வேடபட்டி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் 14 வயது மற்றும் 16 வயது சிறுவர்கள் இரண்டு பேரும், 10 வயதுக்குட்பட்ட சிறுமிகள் விளையாடலாம் என்று அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பிறகு சிறுவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

அதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமிகள் அனைவரும் நடந்த சம்பவம் குறித்து தங்களின் பெற்றோரிடம் கூறியுள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து சிறுவர்கள் 2 பேரையும் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |