Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வாலிபர் போக்சோவில் கைது….!!

10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை அடுத்துள்ள தின்னூர் பகுதியில் வெங்கடேஷ் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று வெங்கடேஷ் சிறுமியை  மிரட்டி உள்ளார். அதனால் பயந்த சிறுமி யாரிடமும் இதைப்பற்றி கூறாமல் இருந்துள்ளார். இதையடுத்து சிறுமிக்கு 2 தினங்கள் முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து சிறுமி அச்சத்தில் நடந்த உண்மைகளை பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக வாழவந்தி நாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வெங்கடேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |