திருப்பூர் மாவட்டத்தில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் மாஸ்கோ என்ற நகரில் அப்துல் ரஷீத் (39) என்பவர் வசித்து வருகிறார். அவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி கொண்டிருக்கிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.இந்த நிலையில் நேற்று மதியம் அப்துல் ரஷீத் அதே பகுதியில் இருக்கின்ற ஐந்தாம் வகுப்பு படிக்கும் பத்து வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
இதுபற்றி அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் திருப்பூர் வடக்கு மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அப்துல் ரஷீத்தை கைது செய்துள்ளனர்.