பருகூரில் மொட்டை அடிக்கப்பட்டு வாயில் மிளகாய்பொடி திணிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுவனின் உடலை போலீசார் மீட்டனர் .
பருகூரை அடுத்த கிராமத்தில் உள்ள உச்சன்கொல்லை எனும் பகுதியில் ஒரு மலை கிராமம் உள்ளது. அந்த மலை கிராமத்தில் உள்ள மக்கள் விறகு பொறுக்க செல்வது வழக்கம். அப்படி செல்லும்போது அங்கு ஒரு சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் அனுப்பினர். அங்கு வந்த போலீசார் அந்த சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். அப்போது 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஆகவும், அந்த சிறுவனின் உடலில் பிரம்பால் அடித்த ரத்த காயங்கள் உள்ளது.
தலை முழுவதும் மொட்டை அடிக்கப்பட்டு வாயில் மிளகாய்பொடி திணிக்கப்பட்டு, கை ,கால், மார்பு உள்ளிட்ட பகுதிகள் நெருப்பால் சுட்டு உள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த சிறுவன் இல்லை என்பது உறுதியானது. மேலும் வேறு யாராவது குழந்தையை கடத்தி இப்படி பழிவாங்குவதற்காக செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் ஆகியும் இதுவரை யாரும் சிறுவன் காணவில்லை என்று புகார் அளிக்காததால் அவனின் புகைப்படம் ஆந்திரா காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.