Categories
மாநில செய்திகள்

10 வயது பள்ளி மாணவர்….. யோகாவில் உலக சாதனை….. குவியும் பாராட்டுக்கள்….!!!

கும்மிடிப்பூண்டியை சேர்ந்த 10 வயது பள்ளி மாணவர் யோகாவில் உலக சாதனை படைத்துள்ளார்.

திருவள்ளுவர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த நாகராஜ் மற்றும் நவநீதம் ஆகியவரின் மகன் ரவி கிருஷ்ணா. இவருக்கு பத்து வயதாகிறது. இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். ரவி கிருஷ்ணா தனது இரு கால்களுக்கும் இடையே உடலை முன்னோக்கி வளைத்து பின்புறமாக தலையை மேல் நோக்கிப் பார்க்கும் பாதகுண்டலாசனம் என்ற யோகாசனத்தை ஒரு நிமிடத்தில் 32 முறை செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனையை  வேர்ல்டு வைடு புக் ஆஃப் ரெகார்ட் ,அசிஸ்ட் உலக சாதனை, இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட் என மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம்பெற்றுள்ளது. இவரது உலக சாதனையை அவரது பயிற்சியாளர் சந்தியா உட்பட அந்த பகுதி மக்கள் அனைவரும் பாராட்டி சென்றனர்.

Categories

Tech |