Categories
மாநில செய்திகள்

10 வருடம் திமுக தேர்தல் வனவாசம்…. வெற்றிவாகை சூடிய ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் 232 தொகுதிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்களைப் பிடித்துள்ளது. ஒருவர் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில் திமுக மட்டும் 125 தொகுதிகளில் வாகை சூடியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது. அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் முதல் முறையாக முதலமைச்சர் ஆகிறார்.

இந்நிலையில் தமிழகத்தில் 10 ஆண்டுகள் அரசியல் வனவாசம் அனுபவித்த திமுக தற்போது ஆட்சியை பிடித்துள்ளது. கடினமான நேரத்திலும் பொறுமையை இழக்காமல் கட்சியை வழிநடத்தி ஸ்டாலின் வெற்றிவாகை சூடியுள்ளார். அவரின் வெற்றி நமக்கு ஒரு பாடமாகும். இந்த ஐந்து மாநில தேர்தல் நமக்கு ஒரு பாடம் ஆகும் என கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |