Categories
உலக செய்திகள்

10 வருட போராட்டம்… “நான் என்னோட வீட்ட தரமாட்டேன்”… சாலை அமைக்க இடம் கொடுக்காத பெண்… பின்னர் நடந்த அதிசயம்…!!!

சீனாவில் நெடுஞ்சாலை அமைப்பதற்கு ஒரு பெண் இடம் தராத காரணத்தினால் அந்த பெண்ணின் வீட்டை சுற்றி சாலை அமைந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

நாம் வீட்டை விட்டு வெளியேறி சாலைக்கு சென்றோம் என்றால் சாலைக்கு இரண்டு புறங்களிலும் பெரிய வளாகங்கள், வீடுகள், கடைகள் என பலவிதமான கட்டிடங்கள் இருக்கும். ஆனால் சீனாவில் உள்ள குவாங்சோ என்ற பகுதியில் நெடுஞ்சாலை ஒன்றை அமைப்பதற்காக அந்நாட்டு அரசானது தனியார் நிறுவனம் ஒன்றிடம் பொறுப்பை ஒப்படைத்தது. அந்த நிறுவனமும் அங்கு சாலை அமைப்பதற்காக, அந்தப் பகுதியில் இருந்த மக்கள் அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு பணமாகவோ அல்லது வேறு ஒரு இடத்தை வழங்கி அவர்களை காலி செய்ய வைத்தது.

ஆனால் அப்பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தனது வீட்டை தரமாட்டேன் என்று மிகவும் பிடிவாதமாக இருந்துள்ளார். அந்த இடத்தை விட இரண்டு மடங்கு இடம் தருவதாகவும் அல்லது இரண்டு பிளாட் தருவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்தது. ஆனால் அந்த பெண் பிடிவாதமாக இடத்தை தரவில்லை. சரி எப்படியாவது அவரிடமிருந்து இடத்தை வாங்கி விடலாம் என்ற நம்பிக்கையில் அந்த நிறுவனமும் நெடுஞ்சாலை அமைக்கும் பணியை துவங்கியது. கடைசி வரையிலும் அந்த பெண் அந்த இடத்தை தர முடியாது என்று கூறிவிட்டார்.

இதனால் அந்த பெண் இருக்கும் இடத்தில் மட்டும் ரோடு இல்லாமல் மேம் பாலம் அமைத்து, வீட்டின் இரு புறங்களிலும் நெடுஞ்சாலையை அமைத்தது. இந்தப் பாலம் தற்போது கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. தற்போது அந்த வீடு மட்டும் அங்கு தனியாக இருக்கிறது. இதற்கு நெயில் ஹவுஸ் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வீட்டை பார்ப்பதற்கு பலரும் அங்கு வந்து செல்கின்றனர். ஆனால் அந்த வீடு வெறும் 40 சதுர மீட்டர் கொண்ட இடமாகும். 10 ஆண்டுகள் போராட்டம் நடத்தியும் அந்தப் பெண் தனது வீட்டை தர மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |