பிரான்ஸ் அரசு இந்தியாவிற்கு 28 டன் மருத்துவத்திற்கான உபகரணங்களை விமானம் மூலம் அனுப்பவுள்ளது.
இந்தியாவில் கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை விட ஆக்சிஜன் உதவி கிடைக்காமல் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பாகிஸ்தான், அமெரிக்கா, சீனா உட்பட 40 நாடுகள் இந்தியாவிற்கு தேவைப்படுகின்ற மருத்துவ உபகரணங்களையும், தடுப்பூசிகளையும் ஆக்சிஜன் உட்பட அனைத்து விதமான அவசர தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறது.
https://twitter.com/hashtag/FranceStandsWithIndia?src=hash&ref_src=twsrc%5Etfw
இந்த நிலையில் பிரான்ஸ் நாடு இந்தியாவுடனிருக்கும் சகோதரத்துவத்தை வெளிக்காட்டும் விதமாக உலகத் தரமுடைய 8 ஆக்சிஜன் ஆலைகளும் உட்பட 28 டன் அளவிலான மருத்துவ உபகரணங்களை விமானம் மூலம் இந்தியாவிற்கு வந்தடையும் என்று இந்தியாவிற்கான பிரான்ஸ் நாட்டின் தூதர் இம்மானுவேல் தன்னுடைய ட்விட்டருடைய பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் 8 இந்திய ஆஸ்பத்திரிகள் குறைந்தபட்சமாக அடுத்த 10 வருடங்களுக்கு தாராளமாக ஆக்சிஜனை வழங்கவும் முடியும் என்றுள்ளார்.