Categories
உலக செய்திகள்

10 வருஷமா இப்படி பண்ணி இருக்காரே…! சிக்கலில் அமெரிக்கா அதிபர்…. டிரம்ப் குறித்து பரபர தகவல் ..!!

அதிபர் ட்ரம்ப் பத்து வருடங்களாக வருமான வரி செலுத்தவில்லை என்று செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது

அமெரிக்க அதிபரான ட்ரம்ப் 15 வருடங்களில் 10 வருடங்கள் வருமான வரியை செலுத்த வில்லை என்று பிரபல பத்திரிக்கை நிறுவனமான நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதன் செய்தி குறிப்பில், “அதிபர் ட்ரம்ப் தனது ரியாலிட்டி தொலைக்காட்சி திட்டத்திலும் மற்ற உரிமை ஒப்பந்தங்களிலும் இருந்து 2018ஆம் வருடத்திற்குள் 7427.4 மில்லியன் டாலர் வருமானமாக சம்பாதித்து இருந்தாலும் கடந்த 15 வருடங்களில் சுமார் 10 வருடங்கள் அவர் வருமான வரியை செலுத்த வில்லை.

2016 மற்றும் 2017 ஆகிய வருடங்களில் கூட்டாட்சி வருமான வரிகளை 750 டாலர் வரியாக செலுத்தியுள்ளார். தாம் பெரும் இழப்புகளை சந்தித்து வருவதாக தெரிவித்து குறைவான வருமான வரியை ட்ரம்ப் காட்டியுள்ளார். 2018 ஆம் வருடம் அதிபர் ட்ரம்ப் இழப்பு தொகையாக 47.4 மில்லியன் டாலர் கோரியதாகவும் ஆனால் அந்த வருடம் அவருக்கு குறைந்தபட்சமாக 4434.9 மில்லியன் வருமானமாக கிடைத்தது என்றும் நியூயார்க் டைம்ஸ் நிறுவனம் செய்தியில் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ட்ரம்ப் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியை முற்றிலுமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியபோது, “இந்த செய்தி முற்றிலும் போலியானது. எனது வருமானத்திற்கு நான் சரியான வரியை செலுத்தி இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார். ட்ரம்புக்கு  சொந்தமான நிறுவனங்களில் வழக்கறிஞர் அறிக்கை ஒன்றை நியூயார்க் டைம்ஸ்க்கு அனுப்பியிருந்தார். அதில் “கடந்த தசாப்தத்தில் தனிநபர் வரியாக பல்லாயிரக் கணக்கான டாலர்களை செலுத்தியுள்ளார்.

2015 ஆம் வருடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ததில் இருந்து தனிப்பட்ட வாரியாக மில்லியன் கணக்கான டாலர்களை ட்ரம்ப் செலுத்தியுள்ளார்” என குறிப்பிட்டிருந்தார். அதிபர் ட்ரம்ப் மற்றும் அவருக்கு சொந்தமான வணிக நிறுவனத்தில் இருக்கும் நிறுவனங்களுக்கான வரி விதிப்பை இரண்டு தசாப்தங்களுக்கு சேர்த்து நியூயார்க் டைம்ஸ் பெற்று இருப்பதாக தெரிவித்துள்ளது. அதில் 2018 அல்லது 2019 ஆம் வருடம் முதல் அவருக்கான தனிப்பட்ட வருமானம் பற்றிய தகவல்கள் இல்லை என்றும் அதிபர் வேட்பாளருக்கான நடைமுறையிலிருந்து அதிபர் விலகி தனது வரி குறித்து வெளியிட மறுத்து வருவதாகவும் கூறியுள்ளது.

Categories

Tech |