செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அண்ணா பிறந்தநாளில் ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிப்பதற்கு அரசு முன்வந்திருப்பது பாராட்டுதலுக்குரியது, 700 பேர் விடுவிக்கப்படுவார்கள் இந்த அறிவிப்பை அரசாணையை வரவேற்கிறோம், பாராட்டுகிறோம். இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கி தலைவர்களின் பிறந்த நாளில் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்க இந்த நடைமுறை எவ்வளவு காலம் உள்ளே இருந்தார்கள், என்னென்ன வழக்குகளில் அவர்கள் என்ன தண்டனைகளை பெற்றிருக்கிறார்கள்.
ஆயுள் தண்டனையா, பிற தண்டனையா, எத்தனை ஆண்டுகள் தண்டனை என்கிற அடிப்படையை மட்டும் தான் ஒரு அளவுகோளாக, வரையறையாக கொள்ள வேண்டுமே தவிர, அதில் மதம் என்ற அடிப்படையில் ஒரு அளவுகோல் தேவையற்றது.மதம் சார்ந்த வழக்குகள் என்று பார்க்காமல் எந்த வழக்காக இருந்தாலும் விசாரிக்கப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்ட பிறகு அவர்கள் ஆயுள் தண்டனை கைதிகளாக இருக்கிறார்கள் என்பதை மட்டும்தான் அளவுகோலாகக் கொள்ள வேண்டும். பத்தாண்டு காலமோ… 14 ஆண்டுகாலமோ….
இத்தனை ஆண்டு காலம் கடந்து விடுகிறோம் என்று காலத்தை வரையறை கொள்ளலாம். ஆயுள் தண்டனையாக இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் ஒரு வரையறையாக வைத்துக் கொள்ளலாம் அல்லது வேறு எந்த அளவுகோலையும் பின்பற்றுவது தவறு அல்ல. எனவே அந்த அரசாணையில் மதம் சார்ந்த வழக்குகளில் உள்ளவர்கள் விடுவிக்கப்பட வாய்ப்புகள் இல்லை வரையறையை நீக்கவேண்டும்.
ஆயுள் தண்டனை கைதிகள் இத்தனை ஆண்டுகாலம் தண்டனையை கழித்தவர்கள் என்கின்ற அடிப்படையிலேயே அந்த வரையறையை மாற்றி அனைவரும் பயன்பெறக்கூடிய வகையில் மதம் கடந்து ஜாதி கடந்து தண்டனை காலத்தை கழித்தவர்கள் விடுதலை பெறக் கூடிய வகையில் புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம் என தெரிவித்தார்.