Categories
கல்வி மாநில செய்திகள்

10, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு…. அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் காரணமாக மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அறிவித்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் கட்டாயம் பொது தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு அட்டவணை இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

பள்ளிகளில் 10 ஆம் வகுப்புக்கு மே 6 முதல் 30 ஆம் தேதி வரையிலும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையிலும், 12 ஆம் வகுப்புக்கு மே 5 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை என்னும் வரிசையில், பொதுத்தேர்வு நடைபெறும் என்று  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.இதைத்தொடர்ந்து  அனைத்து வகுப்புகளுக்கும் பொது தேர்வுக்கான அட்டவணையை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளன. மேலும் பள்ளி நிர்வாகத்தினர் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையை சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் பொதுத்தேர்வு எழுத விண்ணப்பிக்க  தவறிய 10 மற்றும் 11 ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் விதமாக அவர்களின் பெயர்களை சேர்ப்பதற்கு கூடுதல் அவகாசம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தற்போதுவரை பொது தேர்வு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் அருகின்ற மார்ச் 28 முதல் மார்ச் 30 வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதோடு  வழக்கமான முறையில் ஏப்ரல் 25 முதல் மே 2 வரை செய்முறை தேர்வுகளும், ஜூன் 17, ஜூலை 7, ஜூன் 23 ஆகிய தேதிகளில் விடைத்தாள்கள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |