Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

10, 11, 12-க்கு பொது தேர்வு ரத்தா? ”அமைச்சர் சொன்ன பதில்”.. எகிறும் எதிர்பார்ப்பு!

2020- 21 ஆம் கல்வி ஆண்டுக்கான கால அளவை முடிவடைய இன்னும் 4-5 மாதங்களே உள்ள நிலையில்  எப்போது பள்ளிக்கூடம் திறக்கும் என்று இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கின்றது.

இதனிடையே இந்த கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு நடைபெறுமா? என்ற கேள்வி, சந்தேகம் மாணவர்களிடம் இருந்து வந்தது… இது குறித்த கேள்விக்கு  பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்..

10, 11, 12 ஆகிய மூன்று வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்து டிசம்பர் மாதம் இறுதியில் முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே வருகின்ற ஏப்ரல், மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் மார்ச் மாதத்திற்குள் அனைத்து கல்வி நிலையத்தில் உள்ள  அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்க வேண்டுமென்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் பரவியுள்ளது. இந்த நிலையில் தற்போது அமைச்சர்கள் பொதுத்தேர்வு குறித்து இப்படியான ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |