நாடு முழுவதும் கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பொதுத் தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக CBSE, CISCE பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, பல மாநிலங்களும் ரத்து செய்தன. ஆனால் +2 மதிப்பெண் எப்படி வழங்குவது என்ற குழப்பம் நீடித்து வருகிறது.
பல மாநிலங்களும் +2 தேர்வை ரத்து செய்த நிலையில் ஆந்திர அரசு திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என்று கூறியிருந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறையாததால் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.