தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவித்த பிறகு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம் என்ற தகவல் தெரிவித்துள்ளார்.