Categories
தேசிய செய்திகள்

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு…. சிறப்பு மதிப்பீட்டு திட்டம்…. சிபிஎஸ்இ அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீடு கணக்கிடப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் பொதுத் தேர்வு நடத்த முடியாமல் போகும் சூழலை தவிர்க்க, சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு நடப்பு கல்வியாண்டு முதல் சிறப்பு மதிப்பீட்டு திட்டத்தை சிபிஎஸ்இ கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதில் பாடத்திட்டத்தை இரண்டாகப் பிரித்து முதல் பருவம், இரண்டாம் பருவம் என தேர்வு நடத்தப்படும். ஒவ்வொரு பருவ முடிவிலும் அகமதிப்பீடு தேர்வும் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |