10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு பிப்ரவரியில் நடக்காது என மத்திய கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ட்விட்டர் பக்கத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான பொது தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெறாது. எப்போது தேர்தல் நடத்தப்படும் என்ற தேதி அரசு தரப்பில் தெரிவிக்கப்படும். மாணவர்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம் அதன் பிறகுதான் மற்றவை எல்லாம்” என தெளிவாக குறிப்பிட்டுள்ளார்
ஏற்கனவே சில தேதிகளில் தேர்வு நடத்தப்படும் என வதந்திகள் பரவி வந்தது அவற்றிற்கு மத்திய அரசு தரப்பிலிருந்து முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. கொரோனா காலத்தில் மாணவர்களின் நலன் கருதி தடுப்பு மருந்து கண்டறியப்பட்டு அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்போதும் சிபிஎஸ்சி தேர்வு பிப்ரவரி மாதம் தொடங்கி மார்ச் முதல் வாரத்தில் முடிவடையும். இந்த வருடம் பிப்ரவரியில் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.