நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா அதிகரித்து வருவதால் மாணவ-மாணவிகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் இமாச்சலப் பிரதேசத்தில் 10, 12 மற்றும் பட்டப்படிப்பு தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அகொரோனா திகரித்து வருவதால் மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி பள்ளி கல்லூரி தேர்வுகள் மே 17 ஆம் தேதி நடத்தப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.