நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில் கொரோனா பரவலையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து ஒடிசா அரசு ஒத்திவைத்துள்ளது. 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவித்துள்ளது. மராட்டியம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், பஞ்சாப், அரியானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.