தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் அச்சம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் சற்று குறைந்துள்ளதால் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கண்டிப்பாக 10, 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 (நாளை) தொடங்கி பிப்ரவரி 15ம் தேதி வரை நடைபெறும். இதற்கு மாணவர்களை தயார் செய்யும் வகையில் திருப்புதல் தேர்வையே பொதுத்தேர்வு போன்று நடத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு தேர்வு முடிந்தபின் இதன் விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளில் மதிப்பீடு செய்யக்கூடாது. ஆகவே திருப்புதல் தேர்வை, பொதுத்தேர்வை போன்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை பள்ளிக்கல்வித்துறை வழங்கியது.
இந்த நிலையில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாள் (பிப்..10) நடைபெற இருந்த திருப்புதல் தேர்வை வரும் 17ஆம் தேதிக்கு மாற்றம் செய்து அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 10-ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற இருப்பதால் அன்று நடைபெறும் திருப்புதல் தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.