Categories
தேசிய செய்திகள்

10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போது…? மாநில கல்விவாரியம் முக்கிய அறிவிப்பு….!!!

இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வி வாரியம் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு கல்வியானது இறுதி பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் அனைத்து கல்வி வாரியங்களும் தங்களது மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை நடத்த திட்டமிட்டு வருகின்றனர். அந்த வகையில் குஜராத் இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வி வாரியம் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் SSC மற்றும் HSC ஆகிய இரண்டிற்கும் பொதுத்தேர்வுகள் மார்ச் 28-ம் தேதி முதல் தொடங்கும். மாணவர்கள் தேர்வு அட்டவணையை அதிகாரப்பூர்வ இணையதளமான gseb.org-ல் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொழிற்கல்வி தேர்வுகள் பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரையிலும் மூன்று ஷிப்டுகளாக நடத்தப்படும். மேலும் இத்தேர்வு ஏப்ரல் 12-ஆம் தேதி வரை நடைபெறும். தேர்வுகள் நியமிக்கப்பட்ட தேர்வு மையங்களில் ஆஃப்லைன் முறையில் நடைபெறும் என்றும், மாணவர்கள் தேர்வு மையத்தில் அனைத்து கோவிட்-19 நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும், மாணவர்கள் தங்களின் அனுமதி சீட்டை தேர்வு மையத்திற்கு கட்டாயம் எடுத்து வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |