Categories
தேசிய செய்திகள்

10, 12th, டிகிரி முடித்த…. 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு…. பிரபல நிறுவனம் சூப்பர் அறிவிப்பு…!!!

கொரோனா வந்த பிறகு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பலரும் தங்களுடைய வேலையை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் கடுமையான நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே  எங்காவது வேலை கிடைக்குமா? என்ற நிலைக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக நிதி சேவைகள் நிறுவனமான பேடிஎம்  மின்னணு பணம் செலுத்தும் முறைக்கு மாறுவது குறித்து வணிகர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் நாடு முழுவதும் 20 ஆயிரம் விற்பனை அலுவலர்களை பணியமர்த்த உள்ளது.

இதற்கு 10 முதல் 12 ஆம் வகுப்பு பட்டப்படிப்பு படித்த இளைஞர்களைத் தேர்வு செய்து பணிகளை தொடங்கியுள்ளது. இதில் பெண்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கும் வகையில் அவர்களை ஊக்குவிக்கும் முடிவு செய்துள்ளது. எனவே இதில் பலருக்கும் வேலை வாய்ப்புக் கிடைக்கலாம் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |