Categories
மாநில செய்திகள்

10.13 கோடியை தாண்டிய கொரோனா பரிசோதனை …!!

நாடு முழுவதும் இதுவரை 10.13 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ்சால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78 லட்சத்தை கடந்துள்ளது. வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பட்டியலில்  மகாராஷ்டிரா தொடர்ந்து முதல் இடத்திலும், ஆந்திரா இரண்டாம் இடத்திலும், கர்நாடகா மூன்றாம் இடத்திலும் உள்ளன. இந்நிலையில்  ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்களிலும் நேற்று வரை 10 கோடியே 13 லட்சத்து 82 ஆயிரத்து 564 பேரின் இரத்த மாதிரிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்காக பரிசோதிக்கப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 12,69,479 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |