தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் இன்று 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 25ஆம் தேதி முதல் துணை தேர்வுகளும், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் துணைத் தேர்வு தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
Categories